
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை அடுத்த தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் எக்ஸிட் போல் (வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் கருத்து கேட்டு வெளியிடுவது) முடிவுகளை அறிவித்துள்ளன நியூஸ் நேசன் மற்றும் சி ஓட்டர் ஆகியவை.
இதில் நியூஸ்நேசன் டிவி, திமுகவுக்கு 124 முதல் 140 சீட்கள் வரை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பாஜக எந்த இடத்திலும் வெல்லாது என்றும், மற்றவர்கள் 4 முதல் 8 இடங்களை பிடிப்பார்கள் என்றும் கூறியுள்ளது.
சி ஓட்டர் கணிப்பு:
திமுக 114 முதல் 118 வரையும், அ.தி.மு.க., 95 முதல் 99 வரை பெறும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் மக்கள் நலக்கூட்டணி 14 இடங்களையும், பாஜக 4 இடங்களையும், மற்றவர்கள் 9 இடங்களையும் பெறுவார்கள் என்று கூறியுள்ளது.
Patrikai.com official YouTube Channel