uma2212

ற்றும் எதிர்பாராத ஒரு மெஸேஜ். அதுவும் நாயகி மேல் அதீத மரியாதையும் மதிப்பும் கொண்ட ஒரு நல்ல நண்பரிடம் இருந்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள். Face book என்ற பெயரில் நாயகன் எழுதிய கேவலமான பதிவை அனுப்பி, “ இது நீங்களா !? முன்னமே சொன்னேன் இந்த நட்பு சரியில்லை என்று நீங்கள் கேட்கவில்லை இப்போ இந்த அவமானம் தேவையா” என்று அந்த நபர்  மெஸேஜ் பண்ணியிருக்க அனலில் இட்ட புழுவாய் துடித்து போகிறாள் நாயகி.

உண்மையில் பல முறை அந்த நண்பர் எச்சரிப்பது உண்டு.   நாயகன் சரியில்லை என்றும் உங்கள் குணத்திற்கு ஏற்ற நல்ல நண்பர் அவர் இல்லை என்றும் அவர் சொல்லும் போதெல்லாம் நாயகி என் நண்பன் அப்படியில்லை என்று அவரிடமே விவாதிப்பதும் உண்டு.

எதை சொல்லி இவரிடம் புரியவைப்பது !? தன்மேல் உயர் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரே இப்படி கேட்க என்ன காரணம் !? என்ன நடக்கிறது நம்மை சுற்றி?

– இப்படி பல கேள்விகள் சுழலாய் மாறி திணறடிக்க “உங்கள் தோழி நிச்சயம் அவ்வளவு கேவலமானவள் இல்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன் ” என்று மட்டும் மெஸேஜில் சொல்லிவிட்டு பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த பதிவை படிக்கிறார்.

அப்போது தான் கவனிக்கிறாள் … பொதுவாக  தனக்கு வரும் கமெண்ட்டுகள் அனைத்திற்கும் லைக் கொடுப்பது நாயகனின் வழக்கம். ஆனால் இந்த பதிவில் நாயகி கொடுத்திருந்த கமெண்ட்டுக்கு லைக் கொடுக்கவில்லை. அவரின் இந்த கமென்ட் க்கு லைக் கொடுக்கும் பழக்கம் அவர் நண்பர்கள் வட்டத்தில் நன்கு தெரிந்ததே. வேண்டுமென்றே நாயகியின் கமென்ட் க்கு லைக் கொடுக்காமல் அடையாள படுத்தியிருந்ததால் தான் நாயகியின் நண்பர் அதை கவனித்துவிட்டு நாயகியிடம் கேட்டிருப்பது புரிகிறது அது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே போனில் அவாய்ட் பண்ணியது, இப்போது கமென்ட் ல் அடையாள படுத்தியிருப்பது என நாயகன் செயல்கள் எதற்கும் காரணம் புரியாமல் குழம்புகிறாள் நாயகி.
நாயகனிடமே கேட்கிறாள் மெஸேஜில்ல
“என்னோட கமென்ட் ட எடுத்துட்டேன்”
” எந்த கமென்ட் ” ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறான் நாயகன்.
” நீ face book ன்னு ஒரு கேவலமான போஸ்ட் போட்டிருந்தியே அதில் போட்ட கமென்ட் ”
” நான் பார்க்கல ”
” யாரை பத்தி எழுதின !?”
“……………”

பதில் வராததால், ” அது எனக்கும் சேர்த்தா !?”என்று கேட்கிறாள் நாயகி.
” என்னோட பர்சனல் பத்தி பேசினவங்களை பத்தி ” நேரிடையாக பதில் சொல்லாத நாயகனிடம்
” மழுப்பாம பதில் சொல்லு.. ப்ளீஸ் ”
” அது உனக்கு தான் தெரியும் ”
” புரியல எனக்கு !” நாயகன் சொல்லவருவது புரியாமல் கேட்கிறாள்.
” என்னை பத்தி நீ பேசியிருந்தால் உனக்கு தான் ” எனும் நாயகன் வார்த்தையை சற்றும் எதிர்பாராத நாயகி அதிர்ச்சியில் உறைந்தே போகிறாள்.

பல்வேறு கேள்விகள் அவளுக்குள் எழுகிறது.
என்ன நடக்கிறது என்னை சுற்றி ?
நாம் யாரிடம் பேசினோம் அபிநயாவை தவிர !? அபிநயாவிடம் கூட தப்பா எதுவும் பேசலையே !? முதலில் அபிநயாவை சந்தித்ததை நாயகனிடம் சொன்னது யார் !? இவன் ஏன் என்மேல் கோவப்படுகிறான் !?

இப்படி பல குழப்பங்களுக்கு நடுவில் ஒரு சந்தேகம் வருகிறது நாயகிக்கு..

(தொடர்ச்சி.. வரும் திங்கட் கிழமை..)