இன்று பெங்களூரு மற்றும் குஜராத் லியோன்ஸ் அணிக்கு இடையே ஐ.பி.எல். 2016 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் செய்ய முடிவு செய்தது.
ஐ.பி.எல். போட்டியில் இது வரை தொடர்ந்து விளையடி வரும் சுரேஷ் ரைய்னா இந்த போட்டியில் விளையாட வில்லை.
பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக கயலே அவுட் ஆனது மூலம் அந்த அணிக்கு ஒரு சறுக்கல் இருத்தது. கோஹ்லி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி 20 ஓவர் முடியும் வரை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
கோஹ்லி 55 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார் இது ஐ.பி.எல். L 2016 போட்டிகளில் கோஹ்லி முன்றாவது சதம் ஆகும்.
டி வில்லியர்ஸ் மறு முனையில் 52 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். பந்து வீசிய குஜராத் பவுலர்கள் என்ன செய்வது என்று குழம்பினர்.
டி வில்லியர்ஸ் எடுத்த 129 ரன்களில் 10 பௌண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். இன்று விராத் கோஹ்லி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மொத்தம் 229 ரன்கள் எடுத்தது டி 20 போட்டிகளில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. 20 ஓவர்களில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.
main-2-1463232043
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஆனால் குஜராத் வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள்.
பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் சஹல் (3/19) மற்றும் ஜோர்டான் (4/11 ) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
குஜராத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூர் 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.