
தி.மு.க. – அ.தி.மு.க. ஆகியவை ஊழல் கட்சிகள். அவற்றுக்கு மாற்றாக நானே இருப்பேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி.
ஆனால், அவரது சொத்து மதிப்பு குறித்து அதிர்ச்சி அளிக்கும் சில விவரங்களை வெளியிட்டிருக்கிறது அறப்போர் இயக்கம்.
வரவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பை ஆராய்ந்து தகவல் வெளியிட்டுவருகிறது அறப்போர் இயக்கம்.
அன்புமணி 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
2009ம் ஆண்டு அன்புமணியின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருந்தது. அதுவே அடுத்த ஐந்து ஆண்டுகளில்.. 2014ம் ஆணஅடு 27 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
அதே போல அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, 2010ம் ஆண்டு சென்னை அடையாறு பகுதியில் 12668 சதுர அடி இடம் வாங்கி இருக்கிறார். மேலும் 4.31 கோடி ரூபாய் மதிப்புள்ள ஷேர்களும் வாங்கியிருக்கிறார்.
அது மட்டுமல்ல ஏற்காடு பகுதியில் அவரது குடும்பத்தினர் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
இப்படி, மந்திரி பதவி வகித்த பிறகு திடுமென பொருளாதார நிதி உயர்ந்து பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அன்புமணி ஊழலுக்கு எதிரான முதல்வர்கா இருப்பாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது அறப்போர் இயக்கம்.
Patrikai.com official YouTube Channel