a
பாஜக கூட்டணியில் இருக்கும் ஐ.ஜே.கே. கட்சி, விளம்பரம் அக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் ஐ.ஜே.கே. கட்சி கோவில்பட்டி, மதுரை வடக்கு, நத்தம் உட்பட  45 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக் கட்சிக்கு கத்திரிகோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தொலைக்காட்சி விளம்பரத்தில் கத்திரிக்கோல் சின்னம் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. அதோடு, அக் கட்சியின் தலைவர் பாரிவேந்தரின் புகைப்படத்துடன்,  “விவசாயிக்குப் பிறந்த படித்த மகன்தான் முதல்வராக வேண்டும்” என்று குரல் ஒலிக்கிறது.
பா.ஜ.க.வும்  தே.மு.தி.க.வும் கூட்டணி அமைக்க  முயற்சி செய்தபோது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளரா அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இது குறித்து பாஜக தலைவர்கள், “முதல்வரை முன்னதாக அறிவிப்பது பாஜகவில் வழக்கம் இல்லை. தேர்தலுக்கு பின்புதான் முதல்வர் முடிவு செய்யப்பட வேண்டும்” என்றனர். பிறகு அக்கூட்டணி அமயவில்லை.
ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஜே.ஜே.கே., “விவசாயின் படித்த மகன்தான் முதல்வராகவேண்டும்” என்று அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் படத்துடன்  பிரச்சாரம் செய்துவருகிறது.  பாரிவேந்தரின் தகப்பனார் விவசாயி எனவும், பாரிவேந்தர்தான் அந்த படித்தவர் என்பது போலவும் குறிப்பிட்ட விளம்பரம் இருக்கிறது.
ஆகவே இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம், “நிச்சயமாக பாஜக அணி சொல்லிக்கொள்வது மாதிரி ஓட்டு வாங்கப்பவதில்லை. இதில் ஏன் இந்த வீண் பிரச்சினை” என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.