டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா இரண்டுநாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா வர இருக்கிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசுவார். அதன் பிறகு சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.
இதையடுத்து நாளை மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினிக்கு சென்று மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். பிறகு சாஞ்சி நகருக்கு சென்று உலக புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுவார். .
அடுத்ததாக, இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்து வைப்பார்.
சிறிசேனா வருகை, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் தெரிவித்தார்.