
தேர்தல் என்பது மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்மானிக்கக் கூடியது. மக்களை பாதிக்கும் விசயங்களைச் சொல்லி பிரதான எதிரெதிர் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.க.வும் வாக்கு கேட்டு வருகின்றன. பரஸ்பரம் ஒன்றை ஒன்று கடுமையாக குற்றம் சாட்டுகின்றன.
இவற்றை வெளிப்படுத்தும் அக் கட்சிகளின் விளம்பரங்களில் ஒரே பெண்மணி நடித்திருக்கிறார் என்ற ஆச்சரியமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
தி.மு.க. விளம்பரத்தில் வந்து, “அ.தி.மு.க. ஆட்சி மோசம்” என்றும், அ.தி.மு.க. விளம்பரத்தில் “தி.மு.க. ஆட்சி மோசம்” என்றும் ஒரே பெண்மணி உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்.
இந்த இரு கட்சிகளும் வெளியிடும் விளம்பரங்களில் உண்மையாகவே பொதுமக்களை பேச வைத்திருக்கிறார்கள் என்று பலரும் நம்பி வரும் வேளையில், இது வெறும் நடிப்புக்காக எடுக்கப்பட்ட விளம்பரப்படம் என்பது இப் பெண்மணி மூலம் வெளிப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சி, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ லிங்க்…
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/05/VID-20160510-WA0001.mp4[/KGVID]
Patrikai.com official YouTube Channel