1
 
பொதுவாக விஜயகாந்த் தமிழில் பேசுவதே புரியாது என்ற ஒரு கருத்து உண்டு. தவிர தொடர்பின்றி ஏதேதோ பேசுவார். ஆனால் என்.டி.டி.வி. ஆங்கில சேனலில் தமிங்கிலீஷ் பேசி அசத்திவிட்டார்.
“அரசியல் ஒரு சினிமா என்றால்… ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்… மை வில்லி  இஸ் ஜெயலலிதா.” என்றவர், “குட் ஆ…” என்று கேட்டார். அதாவது “நல்லா பேசினேனா..” என்கிற அர்த்தத்தில்.
’கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60  அபோவ்” என்று அவர்களின் வயதைக் குறிப்பிட்டவர் தனது வயது பற்றி குறிப்பிட மறுத்துவிட்டார் “ மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!’ என்று பொளந்துகட்டிவிட்டார்.
சில விஐபிக்களை குறிப்பிட்டு அவர்களை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு,
” ஜெயலலிதா திரும்பிக் கொள்வார். ஆனால், கருணாநிதியைப் பார்த்தால்  வண‌க்கம் சொல்வேன். அவர் மரியாதையான மனிதர்”  என்றார்.
அ.தி.மு.கவுடனான கூட்டணி.. பிறகு பிரிவு.. இது குறித்து கேட்டபோது, “பால் விலை ஏறியதைக் கண்டித்து கூட்டணியிலிருந்தே வெளியேறினேன் இப்போ பால் விலையைக் குறைப்போம்னு சில பேரு  தேர்தல் அறிக்கைல சொல்றாங்க” என்று கிண்டலாக பதில் அளித்தார்.
மேலும்,  “ஃபர்ஸ்ட் டைம் ஐ வின் 1 சீட், அடுத்து ஐ 41 சீட் போட்டி. வின்னிங் 29 சீட்ஸ்” என்று ஸ்டைலாக கூறினார்.