1

 
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது பற்றி, தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்ததாவது:
“ பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும் என்றும்  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், 19ம் தேதிக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப்படும்.
வரும் 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு, அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37% அதிகரித்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.   தேர்தல் தொடர்பாக, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமானவரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வீடியோ கான்பிரன்சிங் மூலம் நாளை ஆலோசனை நடத்த  இருக்கிறேன்: இவ்வாறு  லக்கானி கூறினார்.