1
இன்று அட்சய திருதியை. தங்கம வாங்க அலைமோதுவார்கள் மக்கள். இன்று  எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது?
குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை தினத்துக்கு உரிய நன்மைகளை முழுமையாக அளிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
“இன்றைய அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் அளிக் வேண்டும்.  பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வீற்றிருப்பதாக  ஐதீகம்.
அதே போல இன்று  ஏழை எளியோருக்கு  தானதர்மம், அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் பெருமாளின் கடாட்சம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவும் பணச்சிக்கல் தீரும்.
0
சரி, தங்கம் வாங்க நல்ல நேரம் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.
தங்க நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை வெளிப்படுத்துகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் சுக்கிரனை குறிப்பதாகும்.
ஆகவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்க வேண்டும்.
இன்று குரு ஹோரையானது காலை 8 மணி முதல் 9 மணி வரையும், பிறகு மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் உள்ளது. அதுபோல் சுக்கிர ஹோரையானது இன்றைய ததினம் பகல் 11 மணி முதல் 12 மணி வரை உள்ளது. இந்த ஹோரை நேரங்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு உகந்த நேரம்” என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.