மகராஷ்டிரா மாநிலத்தில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டபோதே, “ இது தவறு. பசு இந்துக்களுக்கு புனிதமானது பசு என்கிறார்கள். ஆனால் பசுவை வெட்டிக்கொன்று பார்ப்பனர்கள் தின்றார்கள் என்று வேதங்களிலேயே இருக்கிறது. ஒருவர் தனது விருப்பப்படி உண்ணுவதை பிறர் தடுக்கக்கூடாது” என்று பகிரங்கமாகக் கூறினார்.
அதே போல் இன்றும் பேசினார்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அப்போது கமலிடம் “ மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி உ.பியில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறாரே” என்று கேட்கப்பட்டது.
அதற்கு கமல் “. நான்கூட முன்பு மாட்டுக்கறி சாப்பிட்டேன். இப்போது சாப்பிடுவதில்லை. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது’’ என்றார் பட்டென.
மனதில் பட்டதை பட்டென்று சொல்வதில் கமலுக்கு நிகர் கமல்தான்.