கடந்த 2010 ஆண்டு முஸ்லிம் மதத்தை சேர்ந்த முதல் மிஸ்.அமெரிக்காவாய் தேர்வாகிய ரிமா ஃபாக்கி கடந்த மாதம் கிறிதுவமதத்திற்கு மாறினார்.
ஷியா முஸ்லிமான ரிமா ஃபாக்கி கத்தோலிக்க பள்ளியில் பயின்றவர்.
பட்டம் வென்ற அவர், நான் முதலில் அமெரிக்க குடிமகள், பிறகு நான் அரேபிய-அமெரிக்கன், லெபனீஸ் அமெரிக்கன், கடைசியாய் தான் நான் முஸ்லிம் அமெரிக்கன்” எனக் கூறி இருந்தார்.
பல முஸ்லிம் மதகுருக்கள் இவர் போட்டில் கலந்துக் கொண்டபோதே கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
எங்கள் குடும்பம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட குடும்பம். மதம் என் வாழ்க்கையையோ எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையோ தீர்மானிப்பது கிடையாது. எங்களுக்கு எம்மதமும் சம்மதமே”.
என் சகோதரியின் கணவர் கிறிஸ்தவர். பின்னாளில் என் சகோதரி, அவரது இரண்டு குழந்தைகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர். என் மாமா ஒருவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இப்பொழுது மதகுருவாகி விட்டார்.
” ஈஸ்டர் நாளில் சர்ச்சுக்கு செல்வோம். எங்கள் வீட்டில் கிறித்மஸ் மரம் வைப்பது வாடிக்கை. புகழ்பெற்ற ரேசியோசிட்டி கிறிஸ்துமஸ் நிகழ்விற்கு தவராது செல்வோம். இஸ்லாமியப் பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடத் தவறுவதில்லை. ” என்றார்.
மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்ற போது தான் இஸ்லாம் குறித்த தன் விழிபுணர்வை அவர் வளர்த்துக் கொண்டார்.
இவர் மதம் மாறியுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
அடுத்த வாரம் பிரபல இசைஅமைப்பாளரும் மொரொனைட் கிறிதுவரான வாஸிம் சலிபி யுடன் அடுத்த வாரம் லெபநனில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.