கடந்த 2015 ஆண்டில் மட்டும், வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இந்த அதிரச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சவுதி அரேபியாவில் மட்டும் அதிகபட்சமாக இரண்டாயிரத்து 691 பேர் மரணமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,540 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். குவைத்தில் 611 இந்திய தொழிலாளர்களும், ஓமனில் 520 பேரும், கத்தார் நாட்டில் 279 பேரும், பஹ்ரைன் நாட்டில் 223 பேர் என வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
“இவர்களில் பெரும்பாலானோர் இயற்கையான மற்றும் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளனர் என்று அவர் விகே.சிங் தெரிவித்தாலும், அதன் புள்ளி விவரங்களை வெளியிடவில்லை. ஆகவே வளைகுடா நாடுகளில் முதலாளிகளால் துன்புறுத்தப்பட்டு எத்தனை பேர் மரணமடைந்தனர் என்ற விவரத்தை அமைச்சர் வெளியிட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.