rajini_766382f_2525294g

பாலி படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் கடைசியில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஒரு மாதத்தில் முடிந்து பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றுதான் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்த விசயம் வெளியே கசிய, ரஜினி ரசிகர்கள் ஸ்பெஷல் பொங்கல் கொண்டாட துடிப்புடன் காத்திருந்தார்கள். ஆனால், “படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை: தமிழ்ப்புதாண்டுக்குத்தான்” என்று செய்தி பரவியது.

இப்போது, “அதுவும் இல்லை… ரிலீஸ் தேதி ஜூன் மாதம்தான் ரிலீஸ்” என்று தகவல் வந்திருக்கிறது.

“ஒவ்வொரு படத்தையும் புதுப்படம் போல எண்ணி, முழு ஈடுபாட்டுடன் இறங்குவது ரஜினி பாலிசி. கபாலியிலும் அப்படித்தான். ஆனால், அவரை அப்செட் ஆக்கும் விஷயங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன” என்று வருத்தமான முணுமுணுப்பு கேட்கிறது கபாலி யூனிட்டில்.

இது பற்றி சொல்லப்படுவதை விரிவாக பார்ப்போம்.

“ரஜினியைப் பொறுத்தவரை தனது படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் முதற்கொண்டு சிறு வேடத்தில் நடிப்பவர், டெக்னீஷியன்கள் வரை அவர்தான் தீர்மானிப்பார். ஆனால் கபாலியில் நடந்தது வேறு.

தயாரிப்பாளர் தாணு என்று முடிவெடுத்தது மட்டும்தான் ரஜினி. அதன் பிறகு நடந்ததெல்லாம்… ரஜினி பாணியில் சொல்லப்போனால் இறைவனின் திருவிளையாடல்தான்.

தான்தான் தயாரிப்பாளர் என்று உறுதி ஆனதுமே டைரக்டர் கவுதம் மேனனை ரஜினி முன் கொண்டு வந்து நிறுத்தினார் தாணு.

ஏனென்றால் கவுதமுக்கும் தாணுவுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் உண்டு.

கவுதம் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடித்தே இருந்தது.

அதற்குள், ரஜினி மகள் ஐஸ்வர்யா, டைரக்டர் ரஞ்சித்தை சிபாரிசு செய்ய. அவரையும் சந்தித்து கதை கேட்டார் ரஜினி.   அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்திருந்தது.

இரண்டு டைரக்டர்களும் இருவரது கதைகளும் ஓ.கே.தான். இந்த நிலையில் மகள் ஐஸ்வர்யாவின் சாய்ஸ் ஆன ரஞ்சித்தை டிக் அடித்தார் ரஜினி.

Ranjith_2157718f

ரஞ்சித்த் கொடுத்த ஸ்கிரிப்பை முழு வேகத்தில் படித்த ரஜினி, அதில் ஒரு சில திருத்தத்தைச் சொனார். சில கரெக்சன்களை ஏற்றுக்கொண்ட ரஞ்சித், வேறு சிலவற்றை ஏற்க தயங்கினார்.

ரஜினியும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அடுத்தாக நடிகர் தேர்விலும் தான் விரும்புபவர்கல்தான் வேண்டும் என்று ரஞ்சித் உறுதியாக இருக்க, “ஓ.கே. டைர்க்கடர் சாய்ஸ்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டார் ரஜினி.

ஆனால் பல கதாபாத்திரங்களுக்கு தான் விரும்பியபடி நடிகர்களை தேடிக்கொண்டேடேடே இருந்தார் ரஞ்சித்.

இதற்கிடையே படப்பிடிப்பு மலேசியாவிலா, சென்னையிலா என்கிற குழப்பம் வேறு. ஒரு வழியாக சென்னையிலேயே படப்பிடிப்பு துவக்கப்பட்டது.

சில கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை ஓ.கே. செய்த ரஞ்சித், வேறு சில கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் அமையவில்லை என்றார்.

இதனால் படப்பிடிப்பின் வேகம் குறைந்தது.

இந்த நிலையில், இசை அமைப்பாளர் ரூபத்தில அடுத்த தடை வந்தது. ரஜினி விரும்பியது ஏ.ஆர். ரஹ்மானைத்தான். ஆனால் இதிலும் உறுதியாக இருந்தார் டைரக்டர் ரஞ்சித்.

“சந்தோஷ் நாராயணன் தான் என் பேவரைட்” என்று சொல்லிவிட்டார்.

அதற்கும் புன்னகையுடனே தலையசைத்தார் ரஜினி.

இந்த கட்டத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பற்றி ஒரு சம்பவம்.

Santhosh_Narayananகாமெடி  நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த, “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக அமர்த்தப்பட்டவர் சந்தோஷ் நாராயணன்தான். அவரிடம் பாடலுக்கான மெட்டை வாங்குவதற்குள், நாக்கு தள்ளிப்போய்விட்டது அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத்துக்கு.

டைரக்டர், பாடலாசிரியர் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க… வருவதாக சொன்ன சந்தோஷ் வரமாட்டார். மணிக்கணக்கில் மட்டுமல்ல.. நாள் கணக்கிலும் காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

எப்படியோ இரண்டு பாடல்களுக்கு டியூன் போட்டுக் கொடுத்த சந்தோஷ் அத்தோடு ஆஸ்திரேலியா பறந்துவிட்டார். அவரை ரீச் பண்ணவே முடியாத நிலை. வெந்து நொந்து போன அந்த படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத், சந்தோஷ் நாராயணனை நீக்கிவிட்டு சித்தார்த்தை இசைமைக்க வைத்தார்.

அந்த அளவுக்கு “தொழில் பக்தி” உள்ளவர் சந்தோஷ் நாராயணன்.

அவர் தனது “தொழில் பக்தியை” கபாலியிலும் காட்ட ஆரம்பித்தார். மெட்டோடு வருவதாக தகவல் அனுப்புவார். இங்கே அனைவரும் காத்திருக்க… சந்தோஷிடமிருந்து தகவலே இருக்காது. நாட் ரீச்சபிளில் இருப்பார்.

ஒருமுறை ரஜினியே காத்திருந்த போதும் இதே போல் நடக்க… அதுவரை பொறுமையாக இருந்த ரஜினி, தயாரிப்பாளர் தாணுவை அழைத்து பொங்கிவிட்டார்.

தாணுவோ, “அவங்க கேக்குற தொகைக்கு செக் போட்டுக் கொடுக்கிறேன். மத்தபடி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலை” என்று புலம்பியிருக்கிறார்.

இதனால் அப்செட் ஆன ரஜினி ஒரு கடத்தில் படத்தை ட்ராப் செய்துவிடலாமா என்கிற அளவுக்கு டென்சன் ஆகி, தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவர்களோ, “இதற்கு முந்தை லிங்கா, எதிர்பார்த்தபடி அமையாத நிலையில், கபாலிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. தவிர ஏற்கெனவே ஜக்குபாய், ராணா ஆகிய படங்கள் ட்ராப் ஆகியிருக்கிறது. ஆகவே மீண்டும் அப்படி ஒரு முடிவு வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, டைரக்டர் தரஞ்சித்தை அழைத்த ரஜினி, “ ப்ரதர்… நீங்க கூப்பிடறப்போ நடிக்க வர்றேன். அத்தோட விடுங்க” என்று சொல்லிவிட்டார்.

போகிற போக்கைப் பார்த்தால் ஜூன் மாதத்துக்கு முன்பாக கபாலி ரிலீஸ் இருக்காது என்றே தோன்றுகிறது” – இதுாதான் கபாலி யூனிட்டில் இருந்து கசியும் லேட்டஸ்ட் தகவல்.

ஆனாலும், திரையுலகில் இருக்கும் ரஜினியின் நலம் விரும்பிகள் சொல்வது இதுதான்:

“கபாலி தாமதத்தால் ரஜினி ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை..! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் ரஜினி!”