west_bengal_1

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆறாவது  மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே முடிநதுவிட்டன. இந்த நிலையில்  இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று  தொடங்கியது. 
கிழக்கு மிட்னாபூர், கூச்பெஹர் மாவட்டங்களில் உள்ள 25 தொகுதிகளுக்கான  இந்த இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில்  18 பெண்கள் உள்பட 170 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  மாலை 6 மணி வரை நடைபெறும்.   

பாதுகாப்பு பணியில் 361 மத்திய கம்பெனி போலீசாரும், 12 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.