நியூஸ் 7 தமிழ் டிவி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், திமுகவின் வெளிப்படையான சூழ்ச்சி உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தச்சூர் சாலையில், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து, வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நியூஸ் 7 தமிழில் வெளியான கருத்துக்கணிப்பின் பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், இக் கருத்துக்கணிப்பில் மர்மம் உள்ளதாகவும் வைகோ கூறினார்.
அடுத்து வேலூர் மாவட்டம் ஆற்காடு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட வைகோ, திமுக அதிமுக இரண்டு கட்சிகளும், ஆறு மாதங்களுக்கு முன்னரே வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை பதுக்கி விட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக பத்து கோடியும் திமுக மூன்றரை கோடியும் வேட்பாளர்களுக்கு வழங்கி இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.