சவுதி பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பிரபல பின்லாடன்(Binladin) கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.    தவிர ஆறு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்யிருக்கிறது.
இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
இது குறித்து மக்கா சிவில் பாதுகாப்பு மேஜர். Nayef அல் ஷெரீப் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டு யாருக்கும் இந்த தீ வைப்பு சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த நிறுவனம் காவல்துறையில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இந்த செய்தியை
சவூதி அல் வதன் மற்றும் அரபு டெம்ஸ் மற்றும் வளைகுடா செய்தித்தாள் பெயர் சொல்ல விரும்பாத நபரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் பெருமளவில் இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்  என்பதும் இப்போது அவர்கள் வைலை இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே நிலை  மற்ற வளைகுடா நாடுகளில் விரைவில் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சிரிக்கை செய்துள்ளனர்.
https://www.facebook.com/patrikaidotcom/videos/1542546212707172/