
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜனை ஆதரித்து, நடிகை பபிதா பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன், ஆவடி தொகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியினர், இளைஞரணி தொண்டர்கள், தொழிற்ச்சங்க நிர்வாகிகள், பொதுநலச் சங்க நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என 50 குழுக்களாகப் பிரிந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel