திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது
இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. “புதியதோர் உலகம் செய்வோம்” என்னும் பாரதிதாசனின் கொள்கை முழக்கமே இப்பல்கலைக் கழகத்தின் குறிக்கோள் (Vision ) ஆகும். இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
இப்பல்கலைக்கழகத்தின் மைய வளாகம் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு வளாகம் திருச்சி புறநகர்ப் பகுதியில் உள்ள காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில்சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.
இப்பல்கலைக் கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இக்கல்வி நிறுவனம் திருச்சி மற்றும் அதனை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. இவை தவிர 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் இயங்குகின்றன. இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் “A” கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் டாக்டர் வி.எம்.முத்துக்குமார் ஆவார்.
ஹிட்டல் மறைவு (30, 1945)
ஜெர்மனியின் சர்வாதிகாரி– அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டான். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கொடியை ஏற்றினர். இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் படுதோல்வியடைந்தன. சோவியத் படைகள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சூழ்ந்துகொண்டன. சோவியத் படைகளின் கைகளில் சிக்குவதை தவிர்க்க விரும்பிய ஹிட்லர் தனது மனைவி இவா பிரானுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இறந்துபோன இருவரது உடலையும் ஹிட்லரின் உதவியாளர்கள் தீயிட்டுக் கொளுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு உண்மையில் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் உண்மையில் இறந்தது ஹிட்லர் செட் அப் செய்த ஒரு டூப் என்றும் ஹிட்லர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் அது உண்மையாயின் அதன்பிறகு ஹிட்லர் என்ன ஆனான் என்கிற தகவல் இல்லை.