எண்ணெய் விலையின் வீழ்ச்சி, அண்டை நாடான ஏமனுடன் போர், மற்றும் மத்திய கிழக்கில் பொது கொந்தளிப்பு என சில ஆண்டுகளாகவே சவுதிக்கு சோதனை காலமாகவுள்ளது. இப்போது, சவுதி ராஜ்யம் அதன் மிக முக்கியமான நட்பு நாடான அமெரிக்காவிடமிருந்து புரட்சியை எதிர்கொண்டுள்ளது.
9-11 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அந்நிகழ்வில் சவுதி அரசிற்கு ஏதேனும் தொடர்பிருந்தால், அவர்கள் மீது வழக்கு தொடரவும் நஷட ஈடு கேக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக, ஜனநாயகக் கட்சியின் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சியின் ஜான் கொர்னின் ஆகியோரால் ஸ்பான்சர் செய்யப்பட்டு, செனட் மசோதாவிற்காக இரு கட்சிகளின் ஆதரவும் வளர்ந்து வருகிறது. பெரும்பாலும் சவூதி அரேபிய பயங்கரவாதிகளால் நடந்துள்ள இந்த தாகுதலுக்கு, சவுதி அதிகாரிகள் அல்லது முன்னணி குடிமக்கள் நிதிஉதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த மசோதா உந்துதல் பெற்று வருகிறது.
சவூதி நிதி அமைச்சர் அடெல் அல்-ஜிபேய்ர் , இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், $ 750 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க கருவூல கடன் மற்றும் இதர அமெரிக்க சொத்துக்களை விற்க நேரிடலாம் என்று காங்கிரஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் இந்த நடவடிக்கை “பொருளாதார பேரழிவு” ஏற்படுத்தும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கைகளை ஒபாமா நிர்வாகம் கடுமையாக எடுத்துக் கொண்டு, அது ஜனாதிபதி ஒபாமாவின் பார்வைக்குச் எடுத்துச் செல்லும் போது அவர் அதை தடை செய்வார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோசப் எர்னெஸ்ட் கூறினார்.
அது கவலைக்குரியதாக இருக்கும் என்ற எண்ணம், அந்நிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் கடன் வாங்குகின்றனர் என்ற தவறான நினைப்பினால் தான் ஏற்படுகின்றது. உண்மையில், சவுதி அரேபியா அமெரிக்க கருவூல கடனை வைத்திருப்பதற்கு காரணம் என்னவென்றால் இந்த உடமைகளுக்கானத் தேவை பெரியதாகவும் நிலையானதாகவும் உள்ளது, ஏனெனில் டாலரில் கடனை செலுத்தும் நாட்டின் திறன் சர்வதேச கடன் சந்தைகளுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது, மேலும் அதன் நாணயத்தை அமெரிக்க டாலருக்கு ஈடாக வைத்துக் கொள்ளும் திறனை சவுதி அரசாங்கத்திற்கு கொடுக்கிறது .
சவுதியர்கள் இந்த அச்சுறுத்தலை பின்பற்றினாலும், இது அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்ப சிறிய காரணம் தான் இருக்கிறது. $ 750 மில்லியன் அமெரிக்க சொத்துக்களை வைத்திருப்பதாக கூறும் சவுதி, அதில் பாதிக்கும் குறைவாக அமெரிக்க கருவூல கடன் வடிவில் வந்து தோன்றும். ஒரு தெளிவற்ற 1970 சட்டத்தின் விளைவாக, சவூதி அரேபியா குறிப்பாக எவ்வளவு சொந்தமாக வைத்துள்ளது என்பதை கருவூலத்துறை வெளியிட முடியாது, ஆனால் மற்ற எண்ணெய் ஏற்றுமதியாளர்களோடு இணைந்து அதனுடைய பங்குகளையும் இணைத்ததில் பிப்ரவரி வரை அமெரிக்க அரசாங்க கடனில் சுமார் $280 பில்லியன் சொந்தமாக வைத்துள்ளது.
முன்னாள் அமெரிக்க செனட்டர் பாப் கிரஹாம் சிபிஎஸ் இன் 60 நிமிடங்கள் என்ற செய்தி சேனலுக்கு, விசாரணை செய்யப்பட்ட அந்த 28 பக்கங்கள், பயங்கரவாதிகளுக்கு வெளியிலிருந்து ஆதரவு அதாவது பணக்காரர்களும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் இருந்தும் ஆதரவு வந்ததாக காட்டுகிறது எனவும் அவர்கள் யாரென மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார். செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கவிருக்கும் ஜனாதிபதியின் விஜயத்தின் போது, ஜனாதிபதி ஒபாமாவிற்கும் சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கும் பேச நிறைய இருக்கும் என்று தெரிகிறது.