modi

 

நியூயார்க்:

மெரிக்காவுக்கு வந்த இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைக்குப் பிறகு, அப்போது  குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, தனது நாட்டுக்கள் வரக்கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்தது.

2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று  மோடி  பிரதமராக பதவி ஏற்ற சில நாட்களிலேயே இந்தத் தடையை அமெரிக்க அரசு விலக்கிக்கொண்டது.

அதன் பிறகு அமெரிக்கா சென்ற மோடிக்கு அமெரிக்க அரசின் முழு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஆனால், சில அமைப்புகள் மோடியின் அமெரிக்க வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில்  கடந்த சனிக்கிழமை நடந்த தகவல் தொழிற்நுட்ப பெருநிறுவனங்களின் கூட்டத்தில்  மோடி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்துக்கு அவர் செல்லும் வழியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

”Alliance for Justice and Accountability” என்ற தன்னிச்சையான சட்ட கண்காணிப்பகம் சார்பில் இந்த அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

இப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்களில் மிகப்பெரும்பாலோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏ.ஜே.ஏ.  என்ற  அமைப்பு,  ‘மோடி தோல்வி’ என்ற இயக்கத்தை நடத்துகின்றனர்.  கேள்வி–பதில் நிகழ்ச்சியின்போது மோடியிடம் கேள்வி எழுப்புகிறவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் எனவும் இந்த அமைப்பு அறிவித்தது.

மோடி வருகையை எதிர்ப்பதற்காகவே  modifail.com  என்ற தளத்தையும் ஏற்படுத்தி உள்ளனர்.