செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.
Chernobyl_Disaster
இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது.
chernobyl-nuclear-disaster-384072564
 
“சோவியத் ரஷ்யா (கம்யூனிச ஆட்சி) “வை வீழ்த்திய செர்னோபில் அணு உலை விபத்து : 
Picture1
மிகைல் கோர்பச்சேவ் கூறுகையில் “”எல்லோரும் நான் கொண்டுவந்த சீரமைப்பு நடவடிக்கைகள்தான், “சோவியத் யூனியனும் அதன் கம்யூனிச முறையிலான ஆட்சியும் சிதறுண்டு போனதற்கு காரணம்’ என்கிறார்கள். உண்மையில் அதற்கு காரணம் 1986-ம் வருடம் ஏப்ரல் 26-ம் தேதி செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட வெடி விபத்துதான் சோவியத் யூனியனையும் அதன் தலைமை அமைப்பான கம்யூனிச ஆட்சியையும் சிதறுண்டு போக செய்தது. அதுவரை எங்களது தயாரிப்பான அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது என நம்பியிருந்தோம். இந்த அணு உலைகளை விட நூறு மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஒவ்வொரு எஸ்.எஸ்.18 ராக்கெட்டுகளில் பொருத்தி வைத்திருந்தோம்.
செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. உடனே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொலிட் பீரோ கூடியது. செர்னோபிலுக்கு விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்தது. அந்த விஞ்ஞானிகளுக்கு எதுவும் புரியவில்லை. செர்னோபிலுக்கு போன அவர்கள் கதிரியக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் உடைகள் எதுவும் அணியாமல் அந்த பகுதியில் இருந்த உணவுகளையும் தண்ணீரையும் குடித்தார்கள்.
அத்துடன் சாதாரண தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மாதிரி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை எரிந்து கொண்டிருந்த அணு உலைகளில் ஊற்றினார்கள்.
தண்ணீரை ஊற்றிய ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐந்து ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்தி லேயே மரணம் அடைந்ததுதான் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் கதிரியக்க தாக்குதலின் வலுவை உலகுக்கு வெளிக்காட்டியது. அந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம். அணு உலைகளில் எரியும் கதிரியக்கம் மிக்க தீயை வெறும் தண்ணீரால் அணைப்பது தவறான காரியம் என நாங்கள் புரிந்து கொள்வதற்குள் நிலைமை கைமீறி போய்விட்டது.
அணு உலையில் இருந்த கதிரியக்கம் கொண்ட மூலப் பொருட்கள் அணு உலைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர் மூலம் டினீப்பர் ஆற்றில் கலந்து ரஷ்யாவின் நகரங்கள் மற்றும் உக்ரைன், பைலோரஷ்யா போன்ற சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் வரை பரவியது.
அதன் பிறகுதான் இந்த அணு உலை விபத்து பற்றிய செய்தியை சோவியத் யூனியனின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிராவ்தா தனது மூன்றாவது பக்கத்தில் ஒரு மூலையில் தட்பவெப்ப நிலை குறித்த செய்திகளுடன் ஒரு செய்தியாக வெளியிட்டது.
முதலில் அணுஉலையில் தண்ணீர் ஊற்றிய போர் வீரர்கள் உட்பட வெடித்த அணு உலையில் வேலை செய்த 25 பேர்தான் பலியானார்கள். அடுத்த சில தினங்களில் செர்னோபில் நகரத்தில் வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோனார்கள். அதைத் தொடர்ந்து அணு உலையைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அணு கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இது சோவியத் யூனியனில் பெரிய பீதியை கிளப்பிவிட்டது. இந்த அணுஉலை வெடிப்புக்கு காரணம் சோவியத் யூனியன் என்கிற கூட்டமைப்பும் அதன் தலைமையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும்தான் என மக்கள் நினைத்தனர்.
தரமற்ற அணு உலையை தயாரித்தது சோவியத் நிர்வாகம் என மக்கள் குற்றம் சாட்டினார்கள். அது வெடித்தது என்கிற செய்தியைக் கூட மறைத்தது பெரிய அநியாயம் என மக்கள் பொங்கியெழுந்தார்கள்.
அதுவரை வல்லரசாக இருந்த சோவியத் யூனியனின் செல்வம் முழுவதும் செர்னோபில் அணு உலைகளை மேலும் வெடிக்காமல் கட்டுப்படுத்த பெருமளவு செலவழிக்கப்பட்டது.
அந்தச் செலவினங்களினால் ஏற்பட்ட கடனை இன்னும் ரஷ்யா, உக்ரைன், பைலோ ரஷ்யா போன்ற நாடுகள் தாங்கிக் கொண்டி ருக்கின்றன. இந்த பொருளாதார செலவு மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. உக்ரைன், பைலோரஷ்யா போன்ற நாடுகள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் கிளர்ச்சி ஏற்பட்டது.
செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஒரு வருடத்திற்குள் சோவியத் யூனியனும் அதை ஆண்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு காணாமல் போயின.
 
விளைவுகள்:
che 09 che 8 che 7 che 6 che 5 che 4 che 3 che 1
இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சுற்றுச்சூழலுக்கு வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாக காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.
வரலாறு: சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாகுமா?