
படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான தகுதி சுற்று போட்டி, தென் கொரியாவில்நடந்து வருகிறது. இதில், FISA ஆசியான் மற்றும் ஓசனியா தகுதிச் சுற்றில் இந்திய துடுப்பு படகு வீரர்தத்து போகனால் (25) வெள்ளிப் பதக்கம் வென்றர். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
ராணுவ வீரரான தத்து, ஆண்கள் ஒற்றைத் துடுப்பு படகுப்போட்டி பிரிவில் 2 கிலோ மீட்டர் தூரத்தை 7.63நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தை பிடித்தார். 2000-வது ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு முறையும்ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தகுதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
படகுப்போட்டியில் அனைத்து தகுதிச் சுற்றுகளும் முடிந்து விட்டநிலையில், தற்போது தத்து போகனால்மட்டுமே இந்தியா சார்பில் இப்பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறார். எனவே மத்திய அரசுஅவருக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான நிதியுதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் பங்குபெறும் 9-வது இந்திய துடுப்பு படகு வீரர் தத்து போகனால் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel