gkv
கோவில்பட்டி தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன் திறந்த வேனில் நின்று வாசன் பேசியது:
“இந்தத் தேர்தலை பொருத்தவரை வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். 50 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு, வேதனைகளை மாற்றுவதற்காக கடவுள் தந்த வரப்பிரசாதமாக இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி, பேருந்து வசதி ஆகியவற்றை செய்து கொடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. ஆனால் எவ்வித அடிப்படை வசதிகளும் மக்களுக்கு செய்துதரப்படவில்லை.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது அரசியல் பிரச்னை அல்ல, அது மக்களின் பிரச்னை. அதிமுக, திமுகவால் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது. 50 ஆண்டு காலமாக நல்லாட்சி என்ற பெயரில் மக்களின் வேதனைகளில் சாதனை படைத்த இந்த அதிமுக, திமுகவை அகற்ற வேண்டும்.
ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைய, மக்களின் வரிப்பணம் மக்களின் நலத் திட்டங்களுக்கு கிடைத்திட, அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்திட தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியை ஆதரியுங்கள் என்றார் அவர்”.