மேலவை சுயேட்சை உறுப்பினரும், மதுபான அதிபருமான விஜய் மல்லையாவை தகுதி நீக்கம் செய்ய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
Mallya
கரண்சிங் தலைமையிலான 10 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவில்  சதிஷ் சந்திரா மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), அவினாஷ் ராய் கன்னா ( பாஜக ), சரத் யாதவ் (JDU), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), முகுல் ராய் (திரிணமூல் காங்கிரஸ்), நீரஜ் சேகர் (சமாஜ்வாடி கட்சி) ,  நவநீதகிருஷ்ணன்(அதிமுக) மற்றும் தேவேந்தர் கவுடு(தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவை ஆலோசனைக்குழுவின் தலைவராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங், “மல்லையா நடத்தைக்கு விளக்கம் தர ஏதுவாக ஒரு வார அவகாசம் கொடுக்க உறுப்பினர்கள் முடிவு  செய்துள்ளதாகக் கூறினார்.
அடுத்த கூட்டத்தில் மே 3_ம் தேதி, ஒரு இறுதி முடிவு எடுக்கப் படும் என கரண்சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
“மல்லையா வெளியேற்றப்பட வேண்டும் வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர். எனினும், நாங்கள் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என  கரண்சிங் கூறினார்,
குழு உறுப்பினர் JDU தலைவர் சரத் யாதவ், ” மல்லையா மாநிலங்களவை இருந்து வெளியேற்றப்பட வேண்டிய அவர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அவரது உறுப்பினர் கிட்டத்தட்ட இப்போது போய்விட்டது. இந்த குழு அதனை உறுதிசெய்யவுள்ளது” என்றார்.
குழு உறுப்பினரும்  சிபிஐ-எம் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி  “மல்லையா மாநிலங்களவை உறுப்பினராக இருக்க உரிமை இல்லை” என்று கூறினார்.
தொடர்புடையப் பதிவுகள்:
மல்லையா கடவுச் சீட்டு முடக்கம்
மல்லையா கடவுச் சீட்டு தடை நீக்கம்
மல்லையா பிரிட்டிஷ் குடிமகன் ?
என்னை திட்டுங்கள்..என் மகனை குறை கூறாதீர்கள்
தலைமறைவாய்…புதிய அணியை வாங்கிய மல்லையா