anbumani11
தருமபுரி மாவட்டம் பென்னகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று (25.04.2016) வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஆர். மல்லிகாவிடம் இன்று மதியம் 12.05 மணிக்கு மனுவை சமர்ப்பித்தார்.
பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெங்கடேஸ்வரன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.வி. மாது ஆகியோர் உடனிருந்தனர்.