download (1)
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான யசோதா விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் அந்த தொகுதிக்கு வேட்பாளராக செல்வப்பெருந்தகை அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமான யசோதா, இன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாளர்களுடன் முழக்கமிட்டார்
செய்தியாளர்களிடம் பேசிய யசோதா, “தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை.  அதே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ்காந்தியின் ஆன்மா மன்னிக்காது ஏனென்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த  செல்வப்பெருந்தகை அப்போது, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில்  போராட்டம் நடத்தியவர்” என்றார்.
மேலும், ”காங்கிரஸ் கட்சியில் தலித்துகள், பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் யசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் இரண்டு அணி தலைவர்களும் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.