இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்த் மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டங்களை இலங்கை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டில் பயற்சி போட்டி ஒன்றில் தினேஷ் சந்திமால் அடித்த பந்து பீலிடிங் செய்து கொண்டிருந்த கவுஷல் சில்வா தலையில் பட்டது. கவுஷல் சில்வா அதே இடத்தில் கீழே மயங்கி விழுந்தார். கவுஷல் சில்வா, இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி இதுவரை ஆயிரத்து 404 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
பிலிப்ஸ் ஹியூஸின் ஆஸ்திரேலிய வீரர் தலையில் பந்து தாக்கி இறந்த பிறகு பாதுகாப்புடன் கூடிய ஹெல்மேட்டை தான் அணைத்து வீரர்கள் அணிய வேண்டும் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
Patrikai.com official YouTube Channel