கேரளாவில் உள்ள திரிசூரின் புகழ்பெற்ற கோவிலான திருவம்படி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது ராமபத்ரன் என்ற யானை.

இந்த கோவில் லட்சுமி என்ற ஒரு பெண் யானை உட்பட ஐந்து யானைகளைச் சொந்தமாக வைத்துள்ளது. வழக்கமான சடங்குகளை அது செய்யும். எனினும், கிட்டத்தட்ட ஒரு மாதமாக, அந்த லட்சுமி “விடுமுறையில்” உள்ளதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. லட்சுமி ஒரே இடத்தில் நிற்க வக்கப்பட்டு ஒரு கான்கிரீட் கம்பத்தில் இரவும் பகலும் கட்டிப்போடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது தரையில் படுக்க கூட அனுமதி இல்லை.

திருவம்பாடி ராமபத்ரன் என்ற யானையின் விதி மிகவும் மோசமானதாக உள்ளது. அதன் தும்பிக்கை முடங்கிப் போயுள்ளது. சாப்பிடவோ குடிக்கவோ முடியாமல் அதன் கையாளர்கள் அவர்களது சொந்த வேலகளில் ஈடுபட்டிருக்கும் போது இது வேறுவழியில்லாமல் நிற்கிறது.

விஷயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், அதற்கு காலில் தொற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் வந்ததால்அதைத் தனிச்சிறையில் வைத்துள்ளனர். இரவும் பகலும் அதைக் கட்டிவைத்து, அதன் சிறுநீர் மற்றும் மலத்திலேயே நிற்க கட்டாயப்படுத்தி, அதன் கால் அழுகல் நாளுக்கு நாள் மோசமாகி உடல் காயங்களிலிருந்து சீழ் வெளிவருகிறது.

நமக்குக் கிடைத்துள்ள செய்திகள் படி, ராமபத்ரனுக்கு கால்களில் 11 காயங்கள் மற்றும் உடல் முழுவதும் 15 ஆழமான காயங்கள் அதில் ஒரு காயத்திலிருந்து அதிகமாக சீழ் வடிந்து கொண்டிருக்கிறது.” நிச்சயமாக, இந்த விலங்கு உடல் மற்றும் மன வலியினால் உளவியல் ரீதியாகவும் விரக்தியடைந்திருக்கும்.
ஆலய அதிகாரிகள் லட்சுமி கருவுற்றிருப்பதாக சந்தேகப்படுவதால் இதுபோல் செய்கின்றனர். எனவே லட்சுமிக்கு சிறிது உடற்பயிற்சி அளிக்கக்கூடிய தினசரி வழக்கமான செயல்களான காலை மற்றும் மாலை சடங்குகளின் போது கோவிலுக்கு செல்வது, கோவிலைச் சுற்றி நடப்பது என்பதைக் கூட அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர்.

ஹெரிடேஜ் அனிமல் டாஸ்க் ஃபோர்ஸ் (HATF) செயலாளர் திரு வேங்கடாசலம் கூறுகையில்,
“கர்ப்பிணியாக இல்லாத யானைக்குக் கூட ஒரு இடத்தில் நிற்பது என்பது மிகக் கொடுமையானது. நடப்பது மிக அவசியம், ஏனெனில் அவர்கள் தங்களது பெரிய உடல்களை நகர்த்தவும் எடையை சமாளிக்கவும் நடைபயிற்சி முற்றிலும் அவசியம். உண்மையில் லட்சுமி கர்ப்பமாக இருந்தால், அதற்கு இது மிகவும் கொடூரமானது. குழந்தையுடைய கூடுதல் எடை அவரது கால்களுக்கு சுமையாக இருந்து பயங்கரமான வலியை உண்டாக்கும் .
விலங்கு ஆர்வலர்களிடமிருந்து பெற்ற புகார்களுக்குப் பிறகு, இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI) கடந்த வாரம் திருவம்பாடி கோவிலுக்குச் சொந்தமான அனைத்து யானைகள் மீதும் திடீர் சோதனை ந்டத்தும் படி கேரள உயர் கால்நடை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தது. அதன் அறிக்கை இந்த மாதத்தில் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவில் யானைகள் குட்டி போடுவதற்காக, சங்கிலியால் கட்டி வலுக்கட்டாயமாக ஆண் யானையுடன் உடலுறவில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றது.
திரு வேங்கடாசலம் குறிப்பிடும் முக்கிய விசயம், “ கேரள மாநில கால்நடை மருத்துவர்களுக்கு யானை கருவுற்றிருப்பதைப் பற்றி கண்டறிவதல் குறித்து சிறிதளவு அறிவும் நிபுணத்துவமும் தான் இருக்கிறது. எனவே, பிற மாநிலங்களில் இருந்து நிபுணர்கள் வரவழைக்க வேண்டும் என அவர் கேரள மாநிலம் மற்றும் வன அமைச்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
நன்றி: சாலி கண்ணன்
Patrikai.com official YouTube Channel