
சட்டசபை தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
அவர் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் பத்மஜாதேவியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் தேர்தலை சந்திக்கிறது.
அனைத்து வேட்பாளர்களையும் 28–ந் தேதியே மனுதாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய உள்ளனர். அதற்காக வேட்பாளர்கள் அந்த அந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை வாங்கி மனுதாக்கலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel