நேற்று புனாவில் IPL 2016 இன் 16வது போட்டி புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற புனே பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
கே எல் ராகுல் சொற்ப ரன்களுக்கு அவுட் அக கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி தங்களது அதிரடி ஆட்டம் மூலம் புனே வீரர்கள் பந்துகளை நாலாபக்கமும் அடித்து ரன்கள் எடுத்தவண்ணம் , 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தனர். கோலி 80 மற்றும் டிவில்லியர்ஸ் 83 ரன்கள் எடுத்தனர்.
FotorCreated
புனே தங்களது பேட்டிங் ஆரம்பம் முதல் விக்கெட்கள் இழக்க ஆரம்பித்தனர். ரஹானே மற்றும் தோனி ஜோடி புனே அணியை 100 ரன்கள் கடக்க செய்தனர். ரஹானே மற்றும் டோனி தொடர்ந்து அவுட் அக , புனே அணி தோல்வி நோக்கி பயணித்தனர். பெரேரா வின் அதிரடி ஆட்டம் புனேவிற்கு வெற்றி தரும் என்று நினைத்த புனேவின் ரசிகர்கள் கனவும் பொய்யானது. வாட்சன் தனது இறுதி ஓவரில் பெரேரா மற்றும் அஷ்வின் விக்கெட்களை வீழ்த்த புனே அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை இந்த IPLஇல் தழுவியது . பீட்டர்சென் அடத்தின் கயமுடன் பேட்டிங் செயமுடியதது புனே அணிக்கு பலவினமாக கருதப்பட்டது.
பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் 183/3 ( கோலி 80, டிவில்லியர்ஸ் 83) – புனே சூப்பர் ஜயண்ட்ஸ் 172/8 (ரஹானே 60, தோனி 41, ரிச்சர்ட்சன் 3-13)