உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் சென்ற மாதம் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுப் பட்டனர். ஆர்ப்பாட்ட்த்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜோஷி-யால் தாக்கப் பட்டு காயமடைந்த குதிரைக்கு கால் அகற்றப்பட்டு, செயற்கைக் கால் பொருத்தப் பட்டது. இந்நிலையில், அதன் காயங்களால் ஏற்பட்ட வலியால் இன்று உயிரிழந்தது.
சக்திமான் சாவுக்கு காரணமான எம்.எல்.ஏ. ஜோஷி கைதுச் செய்யப்படவேண்டும் என அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஆனால் இதுகுறித்து அரசுக்கு எந்த அழுத்தத்தையும் அவர் தருவார் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், ஏன் மேனகா காந்தி தவிர எந்த பா.ஜ.க. தலைவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
நாயைக் கொன்ற ஒருவர் கைது செய்யப்படும் போது, குதிரையைக் காயப்படுத்திய எம்.எல்.ஏ. ஏன் கைதுச் செய்யப்படவில்லை ?
மர்ச் -18: 14 நாள் நீதிமன்றக் காவல்
மார்ச் -19: ஜாமின் மறுக்கப் பட்டது.
சக்திமான் மரணத்திற்கு ஆளும் காங்கிரஸின் அலட்சியமேக் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரனையில் இருக்கும் போது, சக்திமான் குதிரை மரணத்தில் என்னை சம்பந்தப்படுத்துவது முறையல்ல என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.