sasik
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில நடந்துவருகிறது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
கர்னாடக அரசு, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா தரப்பு வாதம் ஏற்கெனவே முடிந்து விட்ட படியால், அடுத்தபடியாக சசிகலா, சுதாகரன், இளவரசி மூவர் தரப்பிலும் அவர்களது வழக்கறிஞர் சேகர் வாதாடினார். 1991 காலகட்டத்திலேயே இவர்கள் மூவரும் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், இவர்கள் ஜெயலலிதாவின் பினாமிகளல்ல என்றும் அவர் வாதாடினார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.