vasanthidevi
சென்னை ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். மேலும், இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். தமிழக மகளிர் ஆணையத் தலைவராகவும் பணியாற்றியவர். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருபவர் என்றார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சிம்லா போட்டியிடுகிறார்.

[youtube-feed feed=1]