நேற்று மொஹாலியில் IPL 2016யின் 13வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
476853-sunil-narine-iplபஞ்சாப் வீரர்கள் கொல்கத்தாவின் சுழல்பந்து வீரர்களின்  சிறந்த பந்துவீச்சு மூலம் ஆரம்பம் முதல் ரன்கள் எடுக்க திணறினார்கள். பஞ்சாப் அணியின் மார்ஷ் 56 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனார்கள்.
கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் கம்பிர் மற்றும் உத்தப்பா ஆரம்பம் முதல் சிறப்பாக விக்கெட் இழக்காமல் விளையாடினர். சாஹுவின் பந்து வீசில் அரை சதம் எடுத்த உத்தப்பா அவுட் ஆனார். கம்பிர் மற்றும் இதர வீரர்கள் கொல்கத்தாவிற்கு 17 வது ஓவரில் வெற்றி பெற்று தந்தனர்.
1461050279_andre-russellபஞ்சாப் அணி தங்களது எதிர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டும் இல்லாவிட்டால் சென்ற ஆண்டு IPL இல் கடைசி இடத்தை பெற்றது போல் இந்த ஆண்டும் ஆகிவிடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள் .
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 138/8 (மர்ஷ் 57, நாரைனே 2/22, சாவ்லா 1/18) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 143/4 (உத்தப்பா 53, கம்பிர் 34, சாஹு 2/18)