நெட்டிசன்: சண்முகவேல் முருகன் (Shunmugavel Murugan) அவர்களின் பதிவு
 
2
 
அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்கள்….  ஆனால் இங்கே அதிக சதவீதத்தில் தனியார் ஊழியர்கள் மட்டுமே உள்ளோம்…  எங்களுக்கு நீங்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வரங்களை வழங்க வேண்டாம் … ஆனால் வாழ வழி செய்யுங்கள்….!
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் எல்லாம் தங்களிடம் வேலை பார்க்கும் ஆசிரியர்களை கொத்துகொத்தாக வெளியே அனுப்புகின்றனர்… இந்த வெய்யில் காலத்தில் உடல் வேதனையும் மன வேதனையும் சேர்ந்து உயிரை மெதுவாகக்  கொல்லும் கொடுமையை கொஞ்சம் கூட கருணை இல்லாமல் செய்கின்றனர்….
தனியார் கல்லூரிகளில் மட்டுமல்ல– தனியார் பள்ளிகள்,  தனியார் மருத்துவமனைகள், தனியார் வியாபார நிலையங்கள்,  தனியார் சிறு தொழில் நிறுவனங்கள் –  இவைகளில் பணிபுரிபவர்களுக்கும் பணி பாது காப்பு இல்லை.   இதே போன்று அரசு துறை ஒப்பந்த பணியாளர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
இவர்களுக்கும் புது வாழ்வு கிடைத்திட வழி காண வேண்டும்.  
அனைத்து தனியார் ஊழியர்களின் சார்பாக கேட்கிறோம்.  எங்களின் குடும்பங்களில் ஐந்து வாக்குகள் உண்டு என்ற உரிமையில் கேட்கிறோம். இந்த கொடுமைகளை எப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள்? அடுத்த தலைமுறையை எங்கள் தலைமுறையை கொன்று எங்களின் பாவங்களை வாங்கிக்கொண்டுதான் உருவாக்கப்போகிறீர்களா?
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வேலையை உறுதி செய்யும் சட்டம் இயற்றும் கட்சிக்கே எங்கள் வாக்கு.  யாருக்கு வேண்டும் எங்கள் வாக்கு?”