
சென்ற வாரம் வெளியான தெறி படம் தொடர்பாக இயக்குநர் அமீர், ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதில் தெறி படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக ட்வீட் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தனக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு கணக்கும் இல்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். தன் பெயரில் உள்ள அந்தச் சமூகவலைத்தளங்கள், யாரோ தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel