நம்மூரில், மெட்ராஸ் சென்னை என்றும், பெங்களூர் பெங்களூரு என்றும், கல்கட்டா கொல்கத்தா என்றும், பாம்பே மும்பை என்றும் , சமீபத்தில் குர்கவான் குர்கிராம் என்றும் பெயர் மாற்றம் அடைந்ததைப் போல, செக் குடியரசு எனும் பெயர் நீளமாகவுள்ளதால் , அந்நாட்டின் பெயரைச் சுருக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாகவே இருந்து வந்தது. குறிப்பாக விலையாட்டு வீரர்கலின் டி-ஷர்ட் ல் பெயர் எழுதுவதில் இருந்த சிரமம் குறிப்பிடத்தக்கது.
செக்கோஸ்லோவாக்கியா 1993 இல் அமைதியாய் இரண்டாக பிரிந்த போது ஸ்லோவாகியாவுடன் சேர்த்து செக் குடியரசும் நிறுவப்பட்டது.
நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு அணிகளுக்கு, பொருட்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக செக் குடியரசு “செக்கியா” என அழைக்கப்பட விரும்புகிறது.
நாடு அதன் முழு பெயரைத் தக்க வைத்து கொள்ளும், எனினும் “பிரஞ்சு குடியரசு” “பிரான்ஸ்” என்று ஆனது போல செக்கியா எனபது அதன் அதிகார குறுகிய புவியியல் பெயராகும்.
பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தால், மாற்றப்பட்ட பெயர் ஐக்கிய நாடுகள் சபையிடம் தாக்கல் செய்யப்படும். நாட்டின் சில பிரபலமான ஏற்றுமதி நிறுவனங்களான பில்ஸ்னர் அர்க்வெல் பீர் மற்றும் ஐஸ் ஹாக்கி அணி உட்பட, தற்போது “செக்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் “செக்” என்பது பெயரடை மற்றும் அதை நாட்டின் பெயராக சரியாக பயன்படுத்த முடியாது.
சிலர் “செக்கியா” என்பது அசிங்கமானதாகவும், அல்லது பாதி-தன்னாட்சியாகவுள்ள ரஷியன் குடியரசான “செச்சினியா”, என்பதைப் போல பரீட்சையமாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளனர். எனினும் செக் குடியரசு “செக்கியா” என் அழைக்கப்படவே விரும்புகிறது.