த.நா.கோபாலன் (Gopalan TN)  அவர்களின் முகநூல் பதிவு:
 
 

வெறிச்சோடிக்கிடக்கும் கூடங்குளம் பந்தல்
வெறிச்சோடிக்கிடக்கும் கூடங்குளம் பந்தல்

 
நேற்றைய ஆங்கில இந்து நாளேட்டில் நண்பர் Kolappan Bhagavathy கூடங்குளம் பந்தல் வெறிச்சோடிக் கிடப்பதை சற்று வருத்தத்துடனேயே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
பந்தல் கூரை வழியே பாயும் சூரியக் கதிரைத் தவிர வேறு எதனையும் அங்கே பார்க்கமுடியாதென்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. உதயகுமாருக்கே அந்த தேவாலய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு ஒதுக்கியிருந்த அறையும் நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. அவர் ஏதோ கட்சி துவங்கி தீவிர தமிழினவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அகில இந்திய அளவில் என்ன உலகின் கவனத்தையே ஈர்த்த அம்மக்களின் போராட்டம் இறுதியில் சாதித்ததென்ன? கவனத்தை ஈர்த்தது மட்டும்தானா? இடிந்தகரை தாண்டி இராதாபுரத்தில் கூட பெரிதாக ஆதரவேதும் அப்போதே இல்லை.வைகோ போன்றவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுத்ததுதான் மிச்சம்.
மேலும் அணு உலைகள் அங்கே நிறுவப்போவதாகச் சொல்கின்றனர். நிறுவப்பட்டது ஒழுங்காகச் செயல்படவில்லை மின்சார உற்பத்தியே இல்லை என்றுகூட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அரசு எது குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை. மீண்டும் அங்கே போராட்டம் நடக்கவிடாது அவ்வளவுதான்.
விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கப்பால் போராட்டம் தோல்வியே. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தமிழர் போராட்டம் வென்றுவிட்டதாக கர்ஜிப்பதைப் போல் இங்கும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் முடிவு ஒரே மாதிரிதான்.
யதார்த்தங்களை துவக்கத்திலிருந்தே உதயகுமாரும் உடனிருந்தோரும் பார்க்கத் தவறிவிட்டனர்.
நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல் ஜெயலலிதா அரசு போராட்டத்தை ஆதரிப்பதாக நடித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே இயன்றவரை சலுகைகளையும் உறுதிமொழிகளையும் திட்டங்களையும் பெற்று மக்கள் வாழ்வு மேம்பட வழிசெய்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம்.”