22

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த காலமது.கிராமத்தின் நடுவில் ஊர்மடம். அம்மன் கோவில் வாசலில் வேப்பமரம். நாற்பது அம்பது பேர் அமருமளவுக்கு பெரிய திண்டு. குளக்கரையில்,ஆலமரம், அரசமரம்,ஐயனார் கோயில் ஊர் பொதுக் கிணறுகள். ஆங்காங்கே கிழக்கு பார்த்த பிள்ளையார் கோவில்கள். ஊரில் வாழும் அத்தனை உயிரினங்களும் மடங்களிலும் நிழல்தரும் மரங்களின் அடியிலும் கோயில் குளக்கரைகளிலும் துயர் மறந்து துயில் கொள்ளும்.

படுத்து ஊர்வம்பு பொரணி குசும்பு வம்பு பேசும். கோடை மழை அடைமழை காலத்தில் நிறைந்து தழும்பும் கிணறுகளிலும்,கலுங்கல் தட்டிப் போன நிறைகுளத்தில் முங்கு நீச்சல்போடும்

சிறார்கள், ஆடிக்காத்து, நெல்விதைப்பு, களையெடுப்பு ,கதிரறுப்பு, பொலிப்பாட்டு, மாட்டுக்கு லாடம் ,கள்ளக்காதல் வைப்பு விவாகரத்து ஓடிப்போன கழுதைகளின் கதை கோவில் திருவிழாக்கள்,சாமியாட்டம் மேளம் கரகாட்டம் வில்லடி கிடாய் வெட்டு உறியடி மஞ்சநீராட்டு அடிதடி,கல்யாணம் பால்காய்ப்பு சடங்குகள் சாவுகள் ஸ்பீக்கர் செட்டு என்று கிராம வாழ்வின் எந்த சுகமும் அறியாத ஒரு சமூகம் இப்போது நகரங்களில் இணையம் செல்போன் வாட்ஸ்அப் எனும் லாக்கப்புக்குள் முடங்கிக் கிடக்கிறது.

நாட்டுப்புறகலைகளும்,திருவிழாக்களும்கொண்டாட்டங்களும் பறவைகளும் விலங்குகளும் இயற்கை எழிலும் அவர்களுக்கு சினிமாக்களிலும்,புகைப்படங்களில்தான் வாய்த்திருக்கிறது.

என்னத்தை சொல்ல..?

k2

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா https://www.facebook.com/karadikulam.jeyabharathypriya?fref=ts