DSC_0380
பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பாமக,  முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தர்மபுரி எம்.பியுமான அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.
கடந்த 13ம் தேதி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 90 தொகுதிகளுக்கான அக்கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக அன்புமணி பதவி வகித்து வருகிறார். முதன்முறையாக தற்போது அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணியும், வந்தவாசியில் வடிவேலு ராவணனும் போட்டியிடுவதாகவும்  அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.