அமெரிக்காவில் முன்மொழியப்பட்ட சோடா வரியைப் போல இந்தியாவில் நீரிழிவு நோயை அழிப்பதற்கு சர்க்கரை வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உலகளவில் கிட்டத்தட்ட பதினொரு மக்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கபடுகின்றனர். உலக சுகாதார அமைப்பு, நீரிழிவுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கு 422 மில்லியனுக்கு மேலாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக அதுவும் பல நோயாளிகள் வளரும் நாடுகளில் உள்ளதாக கூறுகிறது.
ஜீ வணிக அறிக்கையின் படி, 2015 இல் இந்தியாவில் சுமார் 2.20 லட்சம் பேர் நீரிழிவு நோயின் காரணமாக தங்கள் உயிர்களை இழந்தனர்.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு சுகாதார செலவு நீரிழிவிற்காக மட்டுமே செலவிடப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
இந்த வரி செயல்படுத்தப்படுவதால், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், கேக்குகள், சாக்லேட் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும்.
இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி உலக சுகாதார தினத்தை நீரிழிவிற்காக அர்ப்பணித்து, ” நம் வாழக்கை முறை தான் உயர்ந்து வரும் நீரிழிவிற்கு மிகப் பெரிய காரணம்” என்று கூறினார்.
இதனயடுத்து மும்பை பங்குச் சந்தையில், முக்கிய சர்க்கரை பங்குகளின் வர்த்தகம் பலவீனமாக இருந்தன.