a

டில்லி: தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில், ஆர்.கே. நகர் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு அ.தி.மு.க. சார்பாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த நிலையில், தி.மு.க தரப்பில், “ஆர்.கே. நகர் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கிறோம். அங்கு ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு நிற்கட்டும்” என்று கூறப்பட்டதாம்.  இது குறித்து இளங்கோவனிடமும் தி.மு.க தரப்பு பேசியதாம்.

இந்த தகவல் காங்கிரஸ் மேலிடத்துக்குச் சென்றது. அங்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், “தி.மு.க விட்டுக்கொடுப்பதாக இருந்தால் ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை விட்டுக்கொடுக்கட்டும்” என்று உறுதியாக கூறிவிட்டாராம். மற்றபடி அவர்,  குஷ்புவைப் பற்றியோ, ஆர்.கே. நகர் தொகுதியைப் பற்றியோ ராகுல் ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.

இதனால், தி.மு.க. தரப்புக்கும், தமிழக காங்கிரஸ் தரப்புக்கும்  தர்மசங்கடமாக போய்விட்டதாம். ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில், ராகுலை புகழ்கிறார்கள். ” கட்சிக்காக உழைத்த ஜோதிமணி பக்கம்தான் கட்சி இருக்கும் என்பதை நிரூபித்துவிட்டார் ராகுல்” என்கிறார்கள் அவர்கள்.