சர்ச்சைக்குரிய அமராபள்ளி நிறுவனத்தின் விளம்பரத் தூதுவர் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விளம்பரத் தூதுவராய் உள்ள ஒரு தனியார் பில்டர் நிறுவனம் விற்பனைச் செய்த பன்மாடிக் குடியிருப்பில், தோனி விளம்பரத்தில் தோன்றிக் கூறியது போல் அடிப்படை வசதிகள் இல்லாது, அங்கு குடியிருப்போர் கடந்த ஞாயிற்றுக் கிழமை ட்விட்டர் சமூக வலைதளத்தில் தோனியைக் காய்ச்சி எடுத்து விட்டனர். அவரை அந்தப் படவியில் இருந்து விலகும்படி கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தோனி அந்த நிறுவனம் தாம் உறுதியளித்த அனைத்து வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டியது அதன் கடமை ” என கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தினருடன் கலந்துபேசுவதாகவும் கூறி இருந்தார்.
அந்தக் கம்பெனியின் உரிமையாளர் அனில் ஷர்மா கூறுகையில், “மக்கள் சிறிய விசயத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர் என்றும் பெரும்பாலான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டு விட்டன. மிக சிறிய அளவிலான வேலைகளே பாக்கி உள்ளன ” என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று அனில் ஷர்மா பத்திரிக்கையாளருக்கு அளித்துள்ள பேட்டியில், இன்று முதல் தோனி எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவர் இல்லை. எங்களால் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நானும், தோனியும் கலந்துப் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
குடியிருக்கும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பழுதுகளும் சரி செய்துவிடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 6-7 வருடங்களாக தோனி இந்த நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.