18 2
ஒவ்வொரு 18-வயதான பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டிய திறமைகள் என்ன ?
18 1
” How to Raise an Adult” என்ற சிறந்த விற்பனைப் புத்தகத்தின் ஆசிரியரும்   ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான  “லித்காட் ஹைம்ஸ் (Lythcott-Haims)” பதிலளிக்கின்றார். Lythcott-Haims
1. ஒரு 18 வயது பிள்ளைக்கு அந்நியர்களிடம் பேச முடிய வேண்டும்.  நாம் குழந்தைகளுக்கு நல்லவர்களிடமிருந்து மோசமான அந்நியர்களைக் கண்டுகொள்வது எப்படி என்ற நயமான திறனைக் கற்பிப்பதற்குப் பதிலாக அந்நியர்களிடம் பேசவேக் கூடாது என்று கற்றுக் கொடுக்கிறோம். அதனால் குழந்தைகள் அந்நியர்களை எப்படி அணுக வேண்டும் என்றுத்  தெரிந்துகொள்வதில்லை- அதாவது மரியாதையுடன் மற்றும் கண் தொடர்புனுடன் (eye contact)- மற்றும் உலகிடமிருந்து உதவி, வழிகாட்டல், மற்றும் அணுகுமுறை கற்றுக்கொள்ளுதல்.
18 f
2. 18 வயதானவருக்கு அவரது வழியை கண்டுபிடிக்க முடிய வேண்டும். அவர்களது கல்லூரி வளாகம், அவர்களது கோடை இன்டர்ன்ஷிப் அமைந்துள்ள நகரம், அல்லது வெளிநாட்டில் அவர்கள் வேலை பார்க்கும் அல்லது படிக்கும் நகரம் எதுவாக இருந்தாலும் தானாகவே பயணம் செய்யும் திறன் வேண்டும். பஸ்ஸோ / சைக்கிளோ அல்லது  நடந்தே அவர்கள் போகக்கூடிய இடத்திற்கு, நாம் வண்டியில் கொண்டுசென்று  இறக்கிவிடுவது அல்லது நாமும் நம் பிள்ளைகளுடன் சேர்ந்து செல்வது கூடாது. இதனால், குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் போகும் வழி தெரியாது, எப்படி போக்குவரத்து விருப்பங்களை கையாளுவது, எப்போது, எப்படி வண்டிக்கு எரிவாயு நிரப்புவது, அல்லது எப்படி போக்குவரத்துத் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றுவது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.
18 c
3. ஒரு 18 வயதானவருக்கு, அவரது பணிகள், வேலைப் பளு, மற்றும் காலக்கெடு ஆகியவற்றை நிர்வகிக்க முடிய வேண்டும் பிள்ளைகளின் வீட்டுப் பாடங்களின் காலகெடு மற்றும் அதை எப்போது செய்ய வேண்டும் என்று நாம் தான் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்; சில நேரங்களில் அதை செய்ய அவர்களுக்கு உதவுகிறோம், சில நேரங்களில் அவர்களுக்கு அதை நாமே செய்து தருகிறோம்; இதனால், குழந்தைகளுக்கு எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, பணிச்சுமையை எப்படி நிர்வகிப்பது, அல்லது வழக்கமான நினைவூட்டல்கள் இல்லாமல் காலக்கெடுவை சந்திப்பது என எதுவுமே தெரிவதில்லை.
18 b
4. 18 வயதானவருக்கு ஒரு வீட்டை இயக்குவதற்கு பங்களிக்க முடிய வேண்டும் நாம் குழந்தைகளை வீட்டு வேலையில் உதவி செய்யுமாறு கேட்பதில்லை, ஏனெனில் இக்காலத்தில் படிப்பிலும் கல்வி சாரா நடவடிக்கைகளிளும் குழந்தைகள் வர்களுடைய முழு நேரத்தையும் செவழித்துவிடுகின்றனர்; இதனால், குழந்தைகளுக்கு, தங்களது சொந்த தேவைகளைப் பார்த்து கொள்வது,, மற்றவர்களின் தேவைகளை மதிப்பது, அல்லது பொது நலனுக்காக நியாயமான பங்களிப்பது என எதையும் செய்யத் தெரிவதில்லை.
5. 18 வயதானவருக்கு உள்ளார்ந்த சிக்கல்களை கையாள முடிய வேண்டும். நாம் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் விஷயங்களைத் தீர்க்கவும் அவர்களுக்கு காயப்படுத்திய உணர்வுகளை ஆற்றவும் நடவடிக்கை எடுக்கிறோம்; இதனால், குழந்தைகள் நமது தலையீடு இல்லாமல் பிரச்சனைகளை சமாளிக்கவும் முரண்பாடுகளை தீர்க்கவும் தெரிந்து கொள்வதில்லை.
18 d
6. 18 வயதானவருக்கு ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்க முடிய வேண்டும். பாடங்கள் மற்றும் பணிச்சுமைகள், கல்லூரி சார்ந்த வேலை, போட்டி, கடுமையான ஆசிரியர்கள், முதலாளிகள், மற்றும் பலர் என அனைத்தையும் சமாளிக்கத் தெரிய வேண்டும். விஷயங்கள் கடுமையாக ஆகும் போது, நாம் உள்ளே நுழைந்து, பணியை முடித்து, காலக்கெடுவை நீட்டித்து, பெரியவர்களிடம் பேசி உதவுகிறோம்; இதனால், குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் எப்போதும் தங்கள் வழியில் போவதில்லை என்றும் அப்படி நடக்காவிட்டால் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தைரியமாக வாழ வேண்டும் என்று தெரிவதில்லை.
7. 18 வயதானவருக்கு சம்பாதிக்க மற்றும் பணத்தை நிர்வகிக்கவும் முடிய வேண்டும். அவர்கள் பகுதி நேர வேலைகள் செய்வதில்லை; அவர்கள் விரும்பும் போதும் தேவைப்படும் போதும் நம்மிடமிருந்து பணம் பெறுகிறார்கள்; இதனால், குழந்தைகள் வேலைகளை முடிப்பதில் ஒரு பொறுப்புணர்வு வளர்த்துக் கொள்வதில்லை, பொருட்களின் விலையைத் தெரிந்து கொள்வதில்லை, மற்றும் எப்படி பணத்தை நிர்வகிப்பது என்றும் தெரியவில்லை.
18 e
8. 18 வயதானவருக்கு அனைத்து விதமான ஆபத்தான முடிவுகளையும் எடுக்க முடிய வேண்டும் நாம் அவர்களுக்கான முழு பாதையும் தீட்டி அவர்களை அனைத்து தடுமாற்றங்கள் மற்றும் ஆபத்துக்களில் விழாமல் தவிர்த்து தடுத்து நிறுத்தியிருக்கமோம்; அதனால் பிள்ளைகளுக்கு, முயற்சி செய்து தோல்வியடைந்து மீண்டும் முயற்சி செய்வதில் தான் வெற்றி கிடைக்கும் என்று தெரிவதில்லை
நினைவில் வையுங்கள்: இந்த எல்லா விஷயங்களையும் நம் குழந்தைகள் பெற்றோரை  தொலைபேசியில் அழைத்து,  நம்மை ஈடுபடுத்தாமல் செய்ய முடிய வேண்டும். அவர்கள் நம்மை கூப்பிட்டு இதை எப்படி செய்ய வேண்டுமென்று கேட்டால், அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் இல்லை என்று அர்த்தம்.
 18 a
நன்றி:  Quora