mummified-woman-found-wearing-sneakers-is-time-travel-a-reality.img

1,500 ஆண்டுகளுக்கு பிறகு அல்தை மலைகளில் கிட்டத்தட்ட 10,000 அடி உயரத்தில், ஒரு பெண்ணின் எஞ்சிய பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணியின் ஒரு கை மற்றும்  கால்கள் கிடைக்கப் பெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் கால்களில் அணிந்திருந்தது மூன்று கோடுகளைக் கொண்ட இன்றைய அடிடாஸ் காலணி போல் தொற்றமளித்ததுதான். இதைக் கண்டதும், இணையத்தில் அனைவரும் காலப் பயணம் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பிவுள்ளனர்.
இதற்கு முன்பு இதே போல் 800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஓர் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒரு மேம்பட்ட நாகரிகத்தின் சாட்சியா? அல்லது காலப் பயணம் சாத்தியமே என்பதற்கு கூறா?
மத்திய ஆசியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட துருக்கி அடக்கம் இதுவே என்கின்றனர். அறிஞர்கள் சிலர் சோதனைகள் பல நடத்திய பிறகு தேவையான உண்மைகளை கண்டறியக் காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காலப் பயணம் உண்மை என்று நினைக்கிறீர்களா?