உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு பக்கம் தொடர்ந்து கருத்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் கலாசாரக் காவலர்கள். இப்போது காமிராவைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். ஒருவரின் ஒப்புதலோ அனுமதியோ இன்றி புகைப்படம் எடுப்பது அநாகரிகம் என்பது கூட தெரியாதவர்களா இவர்கள்? முகம் தெரியாவிட்டாலும் இப்படி படமெடுத்து பத்திரிகையின் அட்டையில் போட்டுப் பிழைப்பதை விட இவர்கள் வேறு பிழைப்பு பிழைக்கலாம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர்கள் தான் சமூக அவலங்களைத் தோலுரிக்கும் காரியத்தைக் கையில் எடுத்திருப்பவர்களாம்.
எல்லை மீறியிருப்பவர்கள் இவர்கள்தான். ஒரு பெண் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. அவளுக்கு அது வேலையும் இல்லை. இந்த உலகம் பாதுகாப்பானது என்ற எண்ணத்தில்தான் பெண்கள் உடன் இருப்பவர்களை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக நடந்து கொண்டிருப்பவர்களை, அதிலும் பத்திரிகையாளர்களைப் பற்றி என்ன சொல்வது?
அட்டை முதல் பின் அட்டை வரை பெண்ணில்லாமல், அவள் படமில்லாமல் ஒரு இதழ் தயாரிக்க முடியாதவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். மடிசார் கட்டிய பெண்ணைக் கூட வெளியில் தெரியும் காலைப் படம் பிடித்துக் காட்டுவார்கள். மகா கேவலம்….!
https://www.facebook.com/jeevasundaribalan