admk-candidates1
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு திரட்டினார். 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், ஒரு மணி நேரம் முன்னதாக மேடைக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி, அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
அப்போது, பர்கூர் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், ஓசூர் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய இருவரும் முதலமைச்சரின் பேச்சையும் பொருட்படுத்தாமல் தூக்க கலக்கத்தில் காணப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையின் முன்பு சற்று நிழலான பகுதியில் அமர்ந்திருந்த அவர்கள் இருவரும், தூங்கி வழிந்தனர்.

[youtube-feed feed=1]