7

“மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை. கன்டெயினர் வேலை கடந்த 2 வருடங்களாய் முன்பு போல் வளமாய் இல்லை..உறவுகள்,நட்புகளிடம் பிணக்கு..எதிர்காலம் குறித்த கவலை.மனதை துவள வைத்தது. மெரினாவில் சஞ்சலத்தோடு தனியாக உட்கார்ந்திருக்கும் போது இவரைப் பார்த்தேன்.

காலை 8 மணியிலிருந்து 2 மணிவரை சென்னை சிட்டி சென்டரில் சீருடையுடன் பணி…மாலை 5 மணிக்கு இப்படி டீ,காபி போட்டு எடுத்துக் கொண்டு பீச்சில் வியாபாரம்….இரவு வீட்டின் அருகில் ஒரு தள்ளுவண்டி டிபன் கடையில் வேலை..

வெளியூரிலிருந்து வந்து தங்கி இப்படி மிக துணிச்சலோடு பிழைக்கும் இவர்களைப் போன்றவர்களை பார்த்த பிறகாவது நாம் திருந்த வேண்டாமா என்று தோணியது…அவரிடம் ஒரு 5 நிமிடம் பேசியதும் கால்களிலுள்ள மணலை உதறியது போலவே கவலைகளையும் அங்கேயே உதறிவிட்டு ஒரு தெம்போடு வீட்டுக்கு வந்து விட்டேன்.
“வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” —-எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்…வாழ்க வளமுடன்!!!!”

z

 

https://www.facebook.com/pavaiyarmalar7?fref=ts