இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், யோகாவிற்குப் பிறகு, தமது கவனத்தை சமஸ்கிருதத்தை நோக்கித் திருப்பியுள்ளார்.

பாங்காக்கில் நடைபெறவுள்ள 16வது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய அரசாங்கம் ஆர்வத்துடன் பங்கேற்கிறது. இந்தியா, 250 சமஸ்கிருத அறிஞர்களை அனுப்பி நிகழ்வுக்கான ஓரளவு நிதி உதவி செய்தது மட்டுமல்லாமல் அந்த மாநாட்டில் இரண்டு மூத்த அமைச்சர்கள் பங்கு பெறுவதையும் காணமுடியும். இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஜூலை 2 நடக்கவிருக்கும் அதன் நிறைவு விழாவில் பங்கேற்கும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. மேலும் வெளிவிவகார அமைச்சகத்தில் சமஸ்கிருதத்தின் கூட்டு செயலாளர் பதவியை உருவாக்குவதுப் பற்றி ஸ்வராஜ் அவர்கள் அறிவித்தார். யாருமே பேசாத எழுதாத அல்லது படிக்காத ஒரு பண்டைய மொழி, எப்படி அயல்நாடுகளில் இந்தியாவின் விவகாரங்களை ஊக்குவிக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டில் சமஸ்கிருதத்தின் பயன்கள் தெளிவாக இருந்தாலும், அது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கலாச்சார தேசியவாதத்தின் ஒரு சமிக்ஞை ஆகும். சமஸ்கிருதம், இந்து மதத்தின் வழிப்பாட்டு மொழி ஆகும், அது எவ்வளவு புனிதமானது என்றால் அது ஓதப்படும் போது கீழ் ஜாதி (75% க்கும் அதிகமான நவீன இந்துக்கள் ) கேட்க கூட அனுமதி இல்லை. சமஸ்கிருதத்தை கொண்டாடுவது இந்தியாவின் மொழியியல் திறனுக்கு கொஞ்சம் அழகு சேர்க்கிறது – இதுவரை ஒரு பண்டைய மொழியை கற்பிப்பதை விட, இந்தியாவில் அனைத்து மக்களும் தங்கள் நவீன தாய்மொழிகளில் இன்னும் படிக்க முடியவில்லை. ஆனால் அது பாஜகவை அதன் சொந்த உயர்-தேசியவாத பகட்டை காட்டிகொள்ள உதவுகிறது.

துரதிருஷ்டவசமாக, எளிமையான தேசியவாத தொன்மங்களை விட உண்மை நிலவரம் பெரும்பாலும் மிக சிக்கலாக உள்ளது. பாஜகவின் இந்து மதம் தேசியவாதத்தின் ஒரு அடையாளமாக சமஸ்கிருதம் இருந்தாலும், இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம் என்னவென்றால் அதை முதன்முதலாக பேசியது இந்துக்கள் அல்லது இந்தியர்கள் அல்ல, அவர்கள் சீரியர்கள்.
சமஸ்கிருதத்தை பேசிய சிரியர்கள்
ரிக் வேதத்தில் (பழைய இண்டிக் அல்லது ரிக்வேத சமஸ்கிருதம் என்று அழைக்கப்படுகிறது) பயன்படுத்தியதே சமஸ்கிருதத்தின் ஆரம்ப வடிவம் ஆகும். அதிசயமாக, ரிக்வேத சமஸ்கிருதம் முதலில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டது இந்திய சமவெளிகளில் காணவில்லை ஆனால் இப்போதுள்ள வடக்கு சிரியாவில் உள்ளது .
தற்போதுள்ள சிரியா, ஈராக், துருக்கி நாடுகளை உள்ளடக்கிய மேல் ஐபிராத்து-டைக்ரிஸ் படுகையை 1500-1350 கி.மு. இடையேயான காலத்தில் மிட்டானி என்றவர்கள் ஆண்டார்கள். சமஸ்கிருதத்திற்கு தொடர்பில்லாத ஹர்ரியன் என்ற மொழியை மிட்டானியர்கள் பேசினார்கள். எனினும், ஒவ்வொரு மிட்டானி ராஜாவுக்கும் ஒரு சமஸ்கிருத பெயர் இருந்தது அது போலவே பல உள்ளூர் செல்வந்தர்களுக்கும் சமஸ்கிருத பெயர் இருந்தது. அப்பெயர்கள், புருஷா( “ஆண்மகன்” எனப் பொருள்படும்) துஸ்ரட்டா ( “தாக்கும் தேர் கொண்டவர்”), சுவர்தத்தா ( “வானங்களால் கொடுக்கப்பட்டவர்”), இந்த்ரோதா ( “இந்திரனால் உதவப்பட்டவர்”) மற்றும் சுபாந்து, இந்தியாவில் இன்று வரை உள்ள ஒரு பெயர்.
வேதம் படித்தவர்களைப் போல், மிட்டானிக்கும் ஒரு , பண்பாடு, இருந்தது அதாவது மிகவும் மதிப்பிற்குரிய தேர் போரை கையாண்டனர். உலகின் பழமையான ஆவணத்தில் ஒன்றான ஒரு மிட்டானி குதிரை பயிற்சி கையேட்டில், பல சமஸ்கிருத வார்த்தைகள் பயன்படுத்துப்படுகிறது. ரிக் வேதத்திலுள்ள தெய்வங்களைப் போன்றே மிட்டானியர்களும் வழிபாடு செய்தனர். அவர்கள் எதிரி நாட்டு ராஜாவுடன் கி.மு. 1380 ல் போட்ட ஒப்பந்தத்தில் இந்திரன், வருணன், மித்ரன் மற்றும் நஸாட்யாஸ் (அஷ்வின்ஸ்) ஆகியோர் தெய்வீக சாட்சிகளாக இருந்தனர்.
இந்தியாவின் தொன்மை மொழி என நிறுவ பா.ஜ.க. அரசு முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்கு நேரெதிராக , பாகிஸ்தான் , அரேபிய மொழியை பாகிஸ்தானின் தொன்மையான மொழி என நிறுவ பாகிஸ்தான் அரசு முயற்சியில் இறங்கியுள்ளது.
இவ்விரண்டிற்கும் எவ்வித சான்றுகளும், தொல்லியல் ஆதாரங்களும் இல்லை. எனினும், மதவாத அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு பொய் தான் மூலதனம் என்றால் அது மிகையாகாது.
Patrikai.com official YouTube Channel